’சாட்ஜிபிடி கோ’ இன்று முதல் ஓராண்டுக்கு இலவசம் - ஓபன் ஏஐ நிறுவனத்தின் அறிவிப்பு
பெங்களூரு, 4 நவம்பர் (ஹி.ச.) கடந்த ஆகஸ்ட் மாதம் சாட்ஜிபிடி கோ செயலியை அறிமுகப்படுத்திய ஓபன் ஏஐ நிறுவனம், பின்னர் அதை 399 ரூபாய் சந்தா செலுத்தி பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தியது. இந்நிலையில் தான் சாட்ஜிபிடி கோ செயலியை ஓராண்டுக்கு இந்தியர்கள்
’சாட்ஜிபிடி கோ’ இன்று முதல் ஓராண்டுக்கு இலவசம் - ஓபன் ஏஐ நிறுவனத்தின்  அறிவிப்பு இன்று முதல் அமல்


பெங்களூரு, 4 நவம்பர் (ஹி.ச.)

கடந்த ஆகஸ்ட் மாதம் சாட்ஜிபிடி கோ செயலியை அறிமுகப்படுத்திய ஓபன் ஏஐ நிறுவனம், பின்னர் அதை 399 ரூபாய் சந்தா செலுத்தி பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தியது. இந்நிலையில் தான் சாட்ஜிபிடி கோ செயலியை ஓராண்டுக்கு இந்தியர்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என ஓபன் ஏஐ ஏற்கனவே அறிவித்திருந்தது.

பெங்களூரில் இன்று ‘ஓபன் ஏஐ’ நடத்தவுள்ள சிறப்பு நிகழ்வைக் கொண்டாடும் விதமாக இந்த அறிவிப்பு இன்று (நவ 04) அமலுக்கு வந்துள்ளது. இலவசமாக கிடைக்கும் சாட்ஜிபிடி வெர்ஷனை விட இந்த, வெர்ஷனில் கூடுதல் தரவுகள், புகைப்படங்கள், வரைவுகள் உள்ளிட்டவற்றை அதிவேகமாக பெற முடியும்.

இந்தச் சலுகை மூலம், மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சேவையை இந்தியா்கள் அதிக அளவில் எளிதில் அணுகிப் பயன்பெற முடியும் என்று தெரிவித்துள்ள ஓபன்ஏஐ நிறுவனம், சாட்ஜிபிடி ஃப்ரீ-யை விட சாட்ஜிபிடி கோ-வில் அதிநவீன அம்சங்கள் உள்ளதாகவும், ஜிபிடி 5 மாடலில் இது வேலை செய்வதால் பயனர்கள் அதிவிரைவாக தகவல்களை பெற முடியும் என்றும் தெரிவித்துள்ளது

Hindusthan Samachar / vidya.b