Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 4 நவம்பர் (ஹி.ச)
வீரப்பன் தேடுதல் வேட்டையில், அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய பாக்கி இழப்பீட்டு தொகை ரூ. 2. 59 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
ரூ.3.79 கோடி பாக்கி இழப்பீட்டு தொகையை வழங்கும்படி தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக தலைமைச் செயலாளர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை எனவும் , பாக்கி இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து ஓராண்டாகியும் அதை அமல்படுத்தாதது நீதிமன்ற அவமதிப்பு செயல் என்றும் உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க முகாந்திரம் உள்ளது எனவும் உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாக்கி இழப்பீடு தொகை வழங்கியது குறித்து நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 கோடியே 59 லட்சம் ரூபாய் வழங்குவதை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தமிழக அரசு மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் இழப்பீட்டுத் தொகை மக்களின் பணம்; அரசு பணம் அல்ல.
மக்களின் பணத்துக்கு அரசு அறங்காவலர் மட்டுமே என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ