Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 4 நவம்பர் (ஹி.ச.)
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு தேதிகள் குறித்து விவாதிக்க தமிழகத்தில் உள்ள அணைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் இன்று (நவ 04) சென்னையில் நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு தேதிகளை அறிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது,
தமிழ்நாட்டில் மார்ச் 11ம் தேதி 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்குகிறது. மார்ச் 11 ல் தொடங்கி ஏப். 6 வரை 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. மே 20 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
மார்ச் 2ம் தேதி 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்குகிறது. மார்ச் 2ல் தொடங்கி மார்ச் 26 வரை 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8-ம் தேதி வெளியாகிறது.
தேதி அறிவித்ததால் மாணவர்கள் பதற்றமடைய தேவையில்லை. உற்சாகத்துடன் தேர்வுக்கு தயாராகுங்கள்.
மாணவர்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று கால்குலேட்டர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b