Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 4 நவம்பர் (ஹி.ச.)
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் கோவை மாவட்ட அ.தி.மு.க மகளிர் அணி சார்பில் கல்லூரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி அ.தி.மு.க மாநில மகளிர் அணி செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான வளர்மதி பேசும்போது.....
கோவையில் கல்லூரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார். அவரை பலாத்காரம் செய்தவர்கள் முள்புதரில் தூக்கி வீசி உள்ளனர்.
அப்போது அவர் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கதறி உள்ளார். ஆனால் அவர் குரல் யாருக்கும் கேட்கவில்லையா ? அவர் கதறியும் வக்கிர புத்தி உள்ள அந்த கும்பல் அவரைவிடாமல் சீரழித்து உள்ளது கோவை மாநகரம் ?இந்த சம்பவத்தை அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை நிலைய செயலாளர் வேலுமணி ஆகியோர் கண்டித்து உள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி சம்பவத்தை கண்டித்து குற்றவாளிகளை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்தார்.
அதன்படி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறு. போலீசார் இந்த சம்பவத்தில் துடியலூரில் வைத்து 3 குற்றவாளிகளை சுட்டுப் பிடித்ததாக கூறி உள்ளார்கள். ஆனால் அவர்களை யாருக்கும் காட்ட வில்லை. அவர்கள் உண்மை குற்றவாளிகளா ? அல்லது போலி குறறவாளிகளா ? என்ற சந்தேகம் உள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் மூலம் போலீஸ் நிலையத்தில் வைத்து அந்த குற்றவாளிகளை அடையாளம் காண செய்ய வேண்டும். இந்த சம்பவத்தை அ.தி.மு.க தலைவர்கள் கண்டித்து உள்ள நிலையில் பொள்ளாச்சி சம்பவத்தில் காவலரை சென்று சந்தித்து மனு கொடுத்த கனிமொழி எம்.பி ஒன்றும் கூறவில்லை அதே பன்று கம்யூனிஸ்ட் மற்றும் தி.மு.க கூட்டணி கட்சிகள் யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை.
எம்.ஜி.ஆர் ஜெயலலிதா எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஆட்சியில் இருந்த போலீசார் தற்போது இல்லை. இப்போது ஸ்டாலின் போலீஸ் தான் உள்ளது. இதுவரை இந்த ஆட்சியில் 4,150 குழந்தைகள் முதல் பெண்கள் வரை பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும்
கோவை மாநகரம் தொழில் நகரம். இங்கு ஏராளமான பேர் வந்து செல்லும் விமான நிலையத்தின் அருகிலேயே இந்த சம்பவம் நடந்து உள்ளது. இதில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இது ஏராளமான அ.தி.மு.க வினர் கலந்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Hindusthan Samachar / V.srini Vasan