Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 4 நவம்பர் (ஹி.ச.)
கோவை விமான நிலையம் அருகே மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவியை கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து இன்று கோவையில் தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இது தொடர்பாக தவெக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,
தமிழ்நாடு தலைகுனியும் அளவிற்கு கோவையில் கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி கோவை மாநகர் மாவட்டம் சார்பாக நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. செவ்வாய்கிழமை மதியம் 12 மணி முதல் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும். இடம்: செஞ்சிலுவை சங்கம், பந்தயச்சாலை, கோவை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதே போல் அதிமுகவும் இன்று கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.
கோவையில் கல்லூரி மாணவிக்கு நடைபெற்ற பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தவறிய தி.மு.க. ஆட்சியை கண்டித்தும் அ.தி.மு.க. ஒருங்கிணைந்த கோவை மாவட்ட மகளிர் அணியின் சார்பில், இன்று காலை 11 மணியளவில், கோவை, செஞ்சிலுவை சங்கம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், மகளிர் அணிச் செயலாளர் பா.வளர்மதி தலைமையில் நடைபெறும். கோவை மாநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் லீலாவதி உண்ணி, கோவை புறநகர் வடக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் விமலா, கோவை புறநகர் தெற்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் கண்ணம்மாள் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b