11.80 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 31 முடிவுற்ற திட்டப்பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
வேலூர், 4 நவம்பர் (ஹி.ச.) வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பொதுப்பணித்துறை. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை. நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, கூட்டுறவுத்துறை ஆகிய துறைகளின
வேலூர்


வேலூர், 4 நவம்பர் (ஹி.ச.)

வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பொதுப்பணித்துறை. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை.

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, கூட்டுறவுத்துறை ஆகிய துறைகளின் சார்பில் 11.80 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 31 முடிவுற்ற திட்டப்பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (4.11.2025) திறந்து வைத்தார்.

பொதுப்பணித்துறை. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் ரூ. 17.91 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 15 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 49,021 பயனாளிகளுக்கு 414.15 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் வழங்கினார்.

முடிவுற்ற திட்டப்பணிகளின் விபரங்கள் பின்வருமாறு :

பொதுப்பணித்துறையின் சார்பில் குடியாத்தம் சார்பதிவாளர் அலுவலகம், வேலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் யோகா மற்றும் இயற்கை முறை சிகிச்சை பிரிவு மற்றும் கூடுதல் பிணவறை. காட்பாடி வட்டம் மேல்பாடியில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு என 5.23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 4 புதிய திட்டப்பணிகளையும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் காட்பாடி ஊராட்சி ஒன்றியம் ஜாப்ராபேட்டை, முத்தரசிகுப்பம் மற்றும் கோரந்தாங்கல், பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் டி.டி.மோட்டூர், குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் லிங்குன்றம் ஆகிய இடங்களில் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள 14 புதிய வகுப்பறைகள்,

கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம் கணியம்பாடி ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள பொதுசுகாதார மையத்திற்கான புதிய கட்டடம், பாலம்பாக்கம் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டடம், கீ.வ.குப்பம் ஊராட்சி ஒன்றியம் துத்திதாங்கல் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடைக்கான புதிய கட்டடம் என 3.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 8 புதிய திட்டப்பணிகளையும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் சார்பில் காட்பாடி ஊராட்சி ஒன்றியம் டி.கே.புரம். கார்ணாம்பட்டு மேல்வடுகன்குட்டை, மேல்பாடி, உண்ணாமலை சமுத்திரம் மற்றும்

ஜாப்ராபேட்டை, அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம் வெங்கனபாளையம். சின்ன அணைக்கட்டு, பொய்கை அம்பேத்கர் நகர், ஊனை வாணியம்பாடி மற்றும் அரிமலை, குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் சிங்கல்பாடி மற்றும் பனகரசிகுப்பம், வேலூர் ஊராட்சி ஒன்றியம் பாலமதி, வேலூர் மாநகராட்சி சேண்பாக்கம். திருவலம் பேரூராட்சி கம்மராஜபுரம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையங்களுக்கான புதிய கட்டடங்கள் என 2.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 16 புதிய திட்டப்பணிகளையும்.

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் வேலூர் மாநகராட்சி கொணவட்டத்தில் 75.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான புதிய கட்டடம். கூட்டுறவுத்துறையின் சார்பில் கீ.வ.குப்பம் ஊராட்சி ஒன்றியம் அன்னங்குடி மற்றும் கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம் பாலாத்துவண்ணான் ஆகிய இடங்களில் மொத்தம் 22.29 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடைக்கான 2 புதிய கட்டடங்கள் என மொத்தம் 11.80 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 31 முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் பொதுப்பணித்துறையின் சார்பில் காட்பாடி மாவட்ட விளையாட்டு வளாகத்தில் சுற்றுச்சுவர். கோட்டநத்தம் கிராம நூலகத்திற்கு கழிவறை. வேலூர் தொழிற்பயிற்சி நிலைய கட்டடம் மற்றும் மாணவர் விடுதியை புனரமைத்தல், அரசு மருத்துவக் கல்லூரி விடுதி மேம்பாடு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவு நவீனப்படுத்துதல், சேண்பாக்கம். சின்ன அல்லாபுரம், கொணவட்டம் ஊராட்சி ஒன்றியத் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 15 வகுப்பறைகள், குடியாத்தம் சமூகநீதி விடுதி சீரமைப்பு, ஏரிகுத்தி கால்நடை மருந்தக புதிய கட்டடம். அணைக்கட்டு வட்டம் பள்ளிகொண்டா வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு, விருப்பாட்சிபுரம் கிராம நூலக கழிவறை. பேரணாம்பட்டு வட்டம் தரைக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3 வகுப்பறைகள் 61601 14.91 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 14 புதிய திட்டப்பணிகளுக்கும். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் குடியாத்தம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி 6TOOT மொத்தம் 17.91 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 15 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

அரசு நலத்திட்டங்கள்:

இந்நிகழ்ச்ச்சியில் துணை முதலமைச்சர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 8,596 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 69 நபர்களுக்கு விபத்து. இயற்கை மரணம், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவித்தொகை காசோலைகளையும். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் 3,500 பயனாளிகளுக்கு 122.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான ஆணைகளையும், முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமான திட்டத்தின்கீழ் 499 பயனாளிகளுக்கு 11.98 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வீடுகளை மறு சீரமைப்பதற்கான ஆணைகளையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் 70 பயனாளிகளுக்கு பணி அடையாள அட்டைகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்களை சார்ந்த 27,127 பயனாளிகளுக்கு 40.73 கோடி ரூபாய்க்கான வங்கி கடன் இணைப்பு, வாழ்வாதார நிதி, சமுதாய முதலீட்டு நிதி, நுண் நிறுவன நிதி, ஒருங்கிணைந்த பண்ணை தொகுப்பு, சுழல் நிதி, இயற்கை பண்ணை தொகுப்பு ஆகிய நலத்திட்டங்களையும்,

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 343 பயனாளிகளுக்கு 1.61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், சக்கர நாற்காலி, பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி, மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம். நவீன காதொலி கருவி, கைத்திறன் பேசி உள்ளிட்ட உபகரணங்களையும், சமூக நலத்துறையின் சார்பில் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 30 பெண் குழந்தைகளுக்கு மொத்தம் 15 லட்சம் ரூபாய்க்கான வைப்புத் தொகை பத்திரங்களையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் 3,687 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகளையும்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 120 பயனாளிகளுக்கு 31.80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மானாவாரி பகுதி மேம்பாடு ஒருங்கிணைந்த பண்ணையம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் 30 பயனாளிகளுக்கு 71.35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பவர் டிரில்லர். சோலார் பம்புசெட்டு, சோலார் டிரையர் உள்ளிட்ட வேளாண் இயந்திரங்களையும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 210 பயனாளிகளுக்கு 60.09 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மானாவாரி பகுதி மேம்பாட்டு திட்டத்தில் கறவை மாடு. பழச்செடிகள், காய்கறி விதைகள், மண்புழு உரப்படுக்கை, தேனி பெட்டி, மாடித் தோட்டத் தொகுப்பு. பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்ட பழச்செடி தொகுப்பு. பரப்பு விரிவாக்க திட்ட தென்னை தொகுப்பு உள்ளிட்ட நலத்திட்டங்களையும், வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையின் சார்பில் 20 விவசாயிகளுக்கு உழவர் சந்தைக்கான அடையாள அட்டைகளையும், கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் 30 பயனாளிகளுக்கு 38.31 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணை, மின்சாரத்தால் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் உள்ளிட்ட நலத்திட்டங்களையும்.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 279 பயனாளிகளுக்கு 4.23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இலவச தையல் இயந்திரம், இலவச சலவை பெட்டி, டாம்கோ ஆலீம் குழு கடன், தனிநபர் கடன், சீர்மரபினர் நலவாரிய அட்டை, மகளிர் உதவும் சங்க சிறு தொழில் உதவித்தொகையும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 125 பயனாளிகளுக்கு 1.67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இலவச தையல் இயந்திரம் மற்றும் பழங்குடியினர் நலவாரிய அட்டைகளையும். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பில் 174 பயனாளிகளுக்கு 37.43 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகப் பொருளாதார மேம்பாட்டு தொழில் முனைவு திட்டத்தில் கறவை மாடு, ஆட்டோ வாகனம் வாங்க கடன் உதவி, தூய்மை பணியாளர் நல வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு ஆணை மற்றும் நலவாரிய அட்டைகளையும்,

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் சார்பில் 310 பயனாளிகளுக்கு மின் இணைப்பு பெயர் மாற்ற ஆணைகளையும், தொழிலாளர் நலத்துறையின் சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 300 பயனாளிகளுக்கு 40.58 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கல்வி, திருமணம், இயற்கை மரணம் மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட உதவித் தொகை காசோலைகளையும்,

குடிமை பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் 1,564 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும், கூட்டுறவுத் துறையின் சார்பில் 1.426 பயனாளிகளுக்கு 15.03 கோடி ரூபாய் பயிர் கடன், கால்நடை பராமரிப்பு கடன், சுய உதவி குழுக்களுக்கான கடன் உதவிகளையும்,

மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் 67 பயனாளிகளுக்கு அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் மற்றும் கலைஞர் கைவினை திட்டத்தில் 1.66 கோடி ரூபாய் மானியத்துடன் கடனுதவியும், மதுவிலக்கு மற்றும் ஆய தீர்வைத்துறையின் சார்பில் 411 பயனாளிகளுக்கு 2.05 கோடி ரூபாய் மறுவாழ்வு நிதி உதவியும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் திறமை தேடல் தேர்வுகளில் வெற்றி பெற்ற 8 மாணாக்கர்களுக்கு 80 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை காசோலைகளையும் என மொத்தம் 49,021 பயனாளிகளுக்கு 414.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு நல திட்ட உதவிகளை வழங்கினார்.

Hindusthan Samachar / vidya.b