Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி,4 நவம்பர் (ஹி.ச.)
நவம்பர் 6-ல் நடைபெறவுள்ள தேர்தலில் 121 தொகுதிகளில் 18 முஸ்லிம்களுக்கு ஆர்ஜேடி வாய்ப்பளித்துள்ளது. அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியின் 2 எம்எல்ஏக்.களும் இடம் பெற்றுள்ளனர்.
ஆர்ஜேடியுடன் இணைந்து 61 தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸில் 10 முஸ்லிம் வேட்பாளர்கள் உள்ளனர். இந்த மெகா கூட்டணியின் இதரக் கட்சிகளில் சிபிஐஎம்எல் மட்டுமே 2 முஸ்லிம்களை நிறுத்தி உள்ளது.
2020 தேர்தலிலும் மெகா கூட்டணியில் இதே அளவில் முஸ்லிம் வேட்பாளர்கள் இடம்பெற்றனர். பிரசாந் கிஷோரும் 21 முஸ்லிம்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளார்.
ஆளும் கூட்டணியில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 101 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் 4 முஸ்லிம் வேட்பாளர்கள் உள்ளனர். அதன் கூட்டணியான எல்ஜேபியில் ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளர் உள்ளார்.
முக்கியக் கூட்டணியான பாஜக 101 தொகுதிகளில் போட்டியிட்டும் அதில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் கூட இடம்பெறவில்லை.
பிஹாரின் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராகி உள்ளார். இவருக்கு 2 துணை முதல்வர்கள் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டது. இக்கூட்டணியின் சிறியக் கட்சியான விகாஷீல் இன்சான் கட்சி (விஐபி) நிறுவனர் முகேஷ் சாஹ்னி, துணை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மற்றொரு துணை முதல்வர் பதவிக்கு முஸ்லிம் வேட்பாளரின் பெயரை அறிவிக்காததால் அதிருப்தியை உருவாக்கி உள்ளது.
18% வாக்காளர்கள் இருந்தும் அதன் பலன் முஸ்லிம்களுக்கு கிடைக்கவில்லை என்ற கருத்து உள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM