Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 4 நவம்பர் (ஹி.ச)
தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் ஈடுபடும் திமுக'வினருக்கு எழும் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு உதவிடும் வகையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தலைமைக் கழகம் மூலம் ஒருங்கிணைத்திட திமுக சட்டத்துறைச் செயலாளர் மூத்த வழக்கறிஞர் என். ஆர். இளங்கோ மேற்பார்வையில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
திமுக நிர்வாகிகள் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான சந்தேகங்களை 08065420020 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கான பதில்களை பெற்று முறையாக பணிகளை மேற்கொள்ள கொள்ள வேண்டும் என கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது.
மேலும் தெற்கு, வடக்கு, மதுரை, சென்னை,டெல்டா, விழுப்புரம், கிருஷ்ணகிரி, மேற்கு, என எட்டு மண்டலங்களுக்கு என தனித்தனியாக நிர்வாகிகள் நியமித்து திமுக தலைமை அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ