Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 4 நவம்பர் (ஹி.ச)
தேர்வு நாட்கள் அறிவிக்கப்பட்டுவிட்டதால் உரிய காலத்திற்குள் பாடப்பகுதிகளை திட்டமிட்டு நடத்தி முடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தலைமையிலான முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூட்டம் நடைபெற்றது.
கடந்த ஆண்டு 11 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாமல் இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பில் தொடர்ந்து பயிலும் மாணவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கி 11 ஆம் வகுப்புத் தேர்விலும் வெற்றி பெற ஊக்கப்படுத்த வேண்டும்.
மழைக்கால முன்னெச்சரிக்கை வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மண்டல அளவில் மாநில அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகள் புகாருக்கு இடமளிக்காத வகையில் உரிய முன்னேற்பாடுகளுடன் நடத்தப்பட வேண்டும்.
ஆசிரியர்கள், ஆசிரியரல்லாப் பணியாளர்கள் மீதான போக்சோ வழக்குகளில் விரைந்து விசாரணை மேற்கொண்டு முடிவெடுக்க வேண்டும்.
ஆசிரியர்கள், ஆசிரியரல்லாப் பணியாளர்கள் மீது நீண்டகாலம் நிலுவையிலுள்ள 17A, 17B குற்றச்சாட்டுகள் மீது உரிய வழிமுறைகளைப் பின்பற்றி விசாரணை மேற்கொண்டு இறுதிஆணை பிறப்பிக்க வேண்டும்.
ஓய்வுபெற்ற அலுவலர்கள், ஆசிரியர்கள், ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கு உரிய பணப்பலன்களை உரிய காலத்தில் வழங்க வேண்டும்.
இந்தக் கல்வியாண்டுக்கு இன்னும் வழங்கப்பட வேண்டிய விலையில்லா கல்வி உபகரணங்கள் உடனுக்குடன் வழங்கி முடிக்கப்பட வேண்டும்.
மாவட்டங்களில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நடைபெற்றுவரும் / நடைபெற வேண்டிய பள்ளிக் கட்டடப் பணிகளை துரிதமாக முடிக்க உரிய துறை அலுவலர்களுடன் பேசி விரைவுபடுத்த வேண்டும்.
SLAS அடைவுத் தேர்வில் பெற்ற மாவட்டத் தேர்ச்சி அறிக்கையை ஆய்வு செய்து பின்தங்கிய பாடங்கள் / பள்ளிகள் / ஒன்றியங்கள் மீது கவனம் செலுத்திக் கற்பித்தலை மேம்படுத்த வேண்டும்.
மாணவர்கள் இடைநிற்றலைக் கண்காணித்தல் – உரிய வயதில் பள்ளியில் சேர்த்தல்.
பெரும்பாலான புகார்கள் பிறதுறை சார்ந்த பள்ளிகளில் இருந்தே வருவதால், மாவட்ட அலுவலர்கள் தங்கள் பகுதியில் உள்ள பிறதுறைப் பள்ளிகளிலும் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து அத்துறை சார்ந்த மாவட்ட அலுவலர்க்குத் தெரியப்படுத்த வேண்டும்.
தங்கள் மாவட்டப் பள்ளிகள் சார்ந்த செய்திகள், புகார்கள், குற்றச்சாட்டுகளை உடனுக்குடன் கவனித்து உரிய குறைதீர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள / தொடங்கப்படவுள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, ஆசிரியர் நியமனம், வகுப்பறை வசதி ஆகியவற்றை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.
2025-26 ஆம் ஆண்டிற்கு பள்ளிக் கல்வித் துறையால் நடத்தப்படும் பல்வேறு போட்டிகள், நிகழ்வுகளை ஜனவரி 2026க்குள் முடிக்கத் திட்டமிட்டுச் செயல்பட வேண்டும்.
Hindusthan Samachar / P YUVARAJ