Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 4 நவம்பர் (ஹி.ச.)
கோவையில் அதிமுக சார்பில் பெண்கள் தங்களை தாங்களே தற்காத்துகொள்ள கோவை மதுக்கரை நகரக்கழக செயலாளர் சண்முகராஜா தலைமையில்கல்லூரி மாணவிகள், பணிக்கு செல்லும் பெண்கள், பேருந்தில் பயணிக்கும் பெண்களுக்கு பெப்பர் ஸ்ப்ரே வழங்கப்பட்டது.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தபிறகு பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருவது பொதுமக்களுடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள், பணிக்கு செல்லும் பெண்கள், பள்ளி, மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் கடப்த 2 ஆம் தேதி கோவை சர்வதேச விமான நிலையத்தின் பின்புறம் ஆண் நன்பருடன் பேசிக்கொண்டு இருந்த கல்லூரி மாணவியை மர்ம நபர்கள் மூன்றுபேர், ஆண் நன்பரை அரிவாளால் வெட்டி மாணவியை கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்து தப்பி ஓடிய சம்பவம் தமிகழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் திமுக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதால், பெண்கள் தங்களை தாங்களே தற்காத்துகொள்ளும் விதமாக கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழகம், கிணத்துகடவு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மதுக்கரை நகரக்கழக செயலாளர் சண்முகராஜா தலைமையில் அதிமுகவினர் சுந்திராபுரம் பேருந்து நிறுத்தத்தில் நின்ற பெண்களுக்கும் பேருந்து பயனம் மேற்கொள்ளும் பெண்களுக்கும் பெபர் ஸ்ப்ரே வழப்க்கினார்.
அதை தொடர்ந்து கோவை பொள்ளாச்சி சாலை ஈச்சனாரி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கும் பெப்பர் ஸ்ப்ரே வழங்கி விழுப்புணர்வை ஏற்படுத்தினார்.
இதில் ஏராளமான கழக தொண்டர்கள் கலந்து கொண்டு பெண்களிடையே விழுப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
Hindusthan Samachar / V.srini Vasan