குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவு நாளை இயங்காது - ஜிப்மர் நிர்வாகம் அறிவிப்பு
புதுச்சேரி, 4 நவம்பர் (ஹி.ச.) குருநானக் ஜெயந்தி அன்று புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது என்று ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு வரு
நாளை குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது என அறிவிப்பு


புதுச்சேரி, 4 நவம்பர் (ஹி.ச.)

குருநானக் ஜெயந்தி அன்று புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது என்று ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,

குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு வருகிற 5-ந்தேதி ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது. எனவே இந்த தேதியில் நோயாளிகள் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனினும், அவசர பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும்.

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரு நானக் ஜெயந்தி (குர்புரப் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது சீக்கிய மதத்தை நிறுவிய குரு நானக் தேவ்ஜியின் பிறந்தநாளைக் கொண்டாடும் ஒரு புனிதமான பண்டிகையாகும்.

இது சீக்கியர்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும், மேலும் இது சீக்கிய குருக்களின் போதனைகளையும், சமத்துவம், இரக்கம், பணிவு போன்ற அவர்களின் கொள்கைகளையும் நினைவுபடுத்துகிறது.

Hindusthan Samachar / JANAKI RAM