Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 4 நவம்பர் (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிவிடையாமபட்டு கிராமத்தில் வசித்து வரும் பட்டியல் சமூகத்தை சேர்ந்த கலியமூர்த்தி மகன் மணிகண்டன் என்பவரை கடந்த 4 ஆண்டுகளாக வானாபுரம் அருகே உள்ள பாசார் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் அவர்களின் மகள் தங்கரோஜா காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மணிகண்டனை காதலிக்கும் விவகாரம் தங்கரோஜா பெற்றோருக்கு தெரிய வர, தங்கரோஜாவை அவரின் மாமா பையனுக்கு திருமணம் செய்ய முயற்சி செய்ததால், பெற்றோரின் எதிர்ப்பை மீறி இருவரும் குஞ்சரம் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் திருமண வயது உள்ளதால் இன்று(04.11.2025) மாலை மாற்றி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் எனது காதலன் மாற்று சமூகமான பட்டியல் சமுதாயத்தை சேர்ந்தவர், நான் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர் இந்நிலையில் எனது உறவினர் மற்றும் பெற்றோர் ஆகியோரால் எங்களுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு மனு அளித்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN