Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 4 நவம்பர் (ஹி.ச.)
தேனி மாவட்டத்தில் கம்பராயப்பெருமாள், காசி விஸ்வநாதர் கோயில் மிக பழமையும் வரலாற்று சிறப்பு பெற்றது. இங்கு தனித் தனி சன்னதிகளில் சிவனும், பெருமாளும் எழுந்தருளியுள்ளது தனிச்சிறப்பாகும்.
மேலும் இத்தலத்தில் கிரீடம் இல்லாத ஆஞ்சநேயர், கமண்டலத்துடன் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி, சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு பின் நான்கு கைகளில் சக்கரங்களுடன் நரசிம்மர் என வேறு எங்கும் காணாத வகையில் விக்ரகங்களை காணலாம்.
மும்மூர்த்தி தலம் என்றும், பிரம்மா இங்கு வன்னி மர வடிவில் இருப்பதாகவும் கூறுகின்றனர். இங்குள்ள காசி விஸ்வநாதர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் 2003 ல் நடைபெற்றது.
அதன் பின் 22 ஆண்டுகளாக நடைபெறவில்லை. அண்மையில் திருப்பணி, கும்பாபிஷேகம் நடத்த உபயதாரர்கள் மூலம் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து 33 அடி உயர கொடிக்கம்பத்திற்கு பாலாலயம் நடந்தது. யாகசாலை ஹோமங்கள் நடைபெற்ற பின் கொடி மர கவசத்தை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றன.
நவ. 10-ல் முகூர்த்தகால் நடப்பட்டு நவ.28 முதல் யாக வேள்விகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
டிச. முதல் தேதி காலை 6:30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடை பெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேக பணிகள் திவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Hindusthan Samachar / vidya.b