Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 4 நவம்பர் (ஹி.ச.)
கரூர் மாவட்டம் வெண்ணெய் மலை பகுதியில் உள்ள பாலசுப்பிரமணியம் கோயிலுக்கு சொந்தமான 547 ஏக்கர் நிலங்களில் பலர் குடியிருப்புகள் கட்டி வசித்து வந்தனர்.
இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இப்பகுதியில் உள்ள கடைகளுக்கு சீல் வைக்கும் பணி, கோயில் நிலங்களில் அறிவிப்பு பலகை வைக்கும் பணி நடந்து வருகிறது.
கடந்த வியாழக்கிழமை அப்பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. இதையடுத்து, இந்து சமய அறநிலைத்துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
பழைய கரூர்-சேலம் சாலையில் வெண்ணைய் மலைப் பகுதியில் உள்ள 4 கடைகளுக்கு சீல் வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனை கண்டித்து அப்பகுதியில் உள்ள மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அப்பகுதியில் அதிகளவிலான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இன்றைய (நவ 04) போராட்டத்தில் பெண் ஒருவர் மயக்கம் அடைந்தார். அவர் மீட்டகப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதனால் போலீஸார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
Hindusthan Samachar / vidya.b