Enter your Email Address to subscribe to our newsletters

மயிலாடுதுறை, 4 நவம்பர் (ஹி.ச.)
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஆரோக்யநாதபுரத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் அமைந்துள்ளது. 24 மணி நேரமும் காவல்துறையினர் நடமாட்டம் உள்ள பாதுகாப்பு மிகுந்த பகுதியாகவும் உள்ளது.
காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அமைந்துள்ள தெருவிற்கு அடுத்து 500 மீட்டர் தொலைவில் அழகப்ப செட்டி தெரு உள்ளது. இந்த தெருவில் சுசிலா என்ற 75 மூதாட்டி ஆலயத்திற்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பும் பொழுது மர்ம நபர்கள் 12 பவுன் தங்க சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளனர்.
மூதாட்டி தனியே நடந்து வரும் பொழுது தொப்பி அணிந்த நபர் ஒருவர் வேகமாக பின்னால் இருந்து மூதாட்டியை பிடித்து கீழே தள்ளி, அவர் கழுத்தில் இருந்த சங்கிலியை அறுத்து தொடர்ந்து வந்த ஒரு பைக்கில் ஏறி தப்பி சென்றுள்ளார்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN