தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை, 4 நவம்பர் (ஹி.ச.) தமிழகம், புதுச்சேரியில் இன்று (நவ 04) இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, நேற்று (நவ 03) காலை வரையிலான 24 மணி நேரத்தில், ராண
தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்யும் : சென்னை வானிலை ஆய்வு மையம்


சென்னை, 4 நவம்பர் (ஹி.ச.)

தமிழகம், புதுச்சேரியில் இன்று (நவ 04) இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்

அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

நேற்று (நவ 03) காலை வரையிலான 24 மணி நேரத்தில், ராணிப்பேட்டை மாவட்டம் கலவை, திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு, விழுப்புரம் மாவட்டம் வளத்தி ஆகிய இடங்களில் தலா, 3 செ.மீ., மழை பெய்துள்ளது.

மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் மியான்மர் கடலோரப் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே இடத்தில் நீடிக்கிறது. இன்று (நவ 04) வங்கதேசம், மியான்மர் கடற்கரையை ஒட்டி நகரக்கூடும்.

தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 11 வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அத்துடன் சில இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 4 டிகிரி செல்ஷியஸ் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழக கடலோர பகுதிகளில் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை. தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிக பட்சமாக ராணிப்பேட்டை மாவட்டம் கலவை, திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு, விழுப்புரம் மாவட்டம் வளத்தி ஆகிய இடங்களில் தலா 3 செமீ, திருவண்ணாமலை மாவட்டம் போளூர், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், அவலூர்பேட்டை ஆகிய இடங்களில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b