குற்றங்களைப் பெருகவிட்டு, பின் குற்றவாளியை சுட்டுப் பிடிப்பதால் யாருக்கு என்ன பயன்? - நயினார் நாகேந்திரன்
சென்னை, 4 நவம்பர் (ஹி.ச) கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் காவலர்கள் சுட்டுப் பிடித்திருப்பதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. பதிலளியுங்கள் இரும்பு மனது முதல்வரே என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் த
Nainar Nagenthran


Rwwet


சென்னை, 4 நவம்பர் (ஹி.ச)

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் காவலர்கள் சுட்டுப் பிடித்திருப்பதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

பதிலளியுங்கள் இரும்பு மனது முதல்வரே என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

பெருநகரத்தின் சர்வதேச விமான நிலையத்தின் அருகிலேயே ஒரு பெண்ணைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து தூக்கி எறியும் அளவிற்குக் குற்றவாளிகளுக்கு தைரியம் எங்கிருந்து வந்தது? தேசத்தையே உலுக்கிய இவ்வழக்கில், மறைந்து ஒளிந்து கொண்டால் தப்பித்துவிடலாம் என்ற எண்ணம் குற்றவாளிகளுக்கு எப்படி வந்தது? ஒரு வேளை அண்ணா பல்கலை பாலியல் வழக்கில் குற்றவாளியைக் காப்பாற்ற வந்த சார் கொடுத்த தைரியமா? சம்பவ இடத்தில் சட்டவிரோத மதுபானக்கடை இயங்கியதும் குற்றம் நிகழ்வதற்கான ஒரு காரணமே. இத்தனை நாட்கள் அந்தக் கடையை இந்த அரசு கண்டுகொள்ளாதது ஏன்?

இப்படி திமுக அரசின் திறனற்ற நிர்வாகத்தால் சட்டம் ஒழுங்கை சீர்கெடச் செய்து, குற்றங்களைப் பெருகவிட்டு, பின் குற்றவாளியை சுட்டுப் பிடிப்பதால் யாருக்கு என்ன பயன்? இழந்த மாணவியின் வாழ்வை மீட்டுக் கொண்டு வரமுடியுமா? மக்கள் மனதில் எழுந்துள்ள அச்சத்தைப் போக்க முடியுமா? அல்லது இனியொரு சம்பவம் இதுபோல நிகழாது என உறுதி கூறத்தான் முடியுமா? பதில் கூறுங்கள் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களே என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ