தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற கர்ப்பிணி பெண் தூக்குப் போட்டு தற்கொலை
நெல்லை, 4 நவம்பர் (ஹி.ச.) நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொட்டல் வடக்கு தெருவை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மனைவி ரஞ்சிதா (வயது 24). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில் ரஞ்சிதா தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார். அவர்
Death


நெல்லை, 4 நவம்பர் (ஹி.ச.)

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொட்டல் வடக்கு தெருவை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மனைவி ரஞ்சிதா

(வயது 24). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில் ரஞ்சிதா தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார்.

அவர் பாளையங்கோட்டை முருகன் குறிச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை ரஞ்சிதா தனது தாய் வள்ளி மயில் மற்றும் சகோதரியுடன் உடல் பரிசோதனைக்காக நெல்லைக்கு வந்திருந்தார்.

பின்னர் மருத்துவமனையில் உள்ள ஒரு அறையில் ரஞ்சிதா அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது தனது தாய் மற்றும் சகோதரியிடம் கழிவறைக்கு செல்வதாக கூறியுள்ளார். ஆனால் வெகு நேரம் ஆகியும் ரஞ்சிதா கழிவறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் கழிவறை கதவை தட்டி ரஞ்சிதாவை அழைத்தபோது அவரிடமிருந்து எந்த சத்தமும் இல்லை.

இதில் பதட்டம் அடைந்த அவர்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் சொல்லவே அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு துப்பட்டாவால் தூக்கிட்டவாறு ரஞ்சிதா தொங்கிக் கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் ரஞ்சிதாவை மீட்டு அங்குள்ள மருத்துவரிடம் காண்பித்தனர்.

அவரை பரிசோதித்த போது ரஞ்சிதா ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. அதை பார்த்ததும் அவரது தாய் மற்றும் சகோதரி கதறி அழுதனர். இதுகுறித்து உடனடியாக பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரஞ்சிதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதல் கட்ட விசாரணையில் ரஞ்சிதாவிற்கு உடல்நிலை பாதிப்பு இருந்துள்ளது.

இதைத்தொடர்ந்து அவர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணி இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN