அனைத்து மதத்தினரும் எங்கள் நாட்டில் சமமாக நடத்தப்படுகின்றனர் - டிரம்ப் குற்றச்சாட்டை நிராகரித்த நைஜீரியா
அபுஜா, 4 நவம்பர் (ஹி.ச.) மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில், திட்டமிட்ட கிறிஸ்துவ இனப்படுகொலை நடப்பதாக சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும், இதை தடுக்க தவறினால், அந்நாடு மீது போர் தொடுக்க தயாராக இருக்குமாறு அமெரிக்க
அனைத்து மதத்தினரும் எங்கள் நாட்டில் சமமாக நடத்தப்படுகின்றனர் - டிரம்ப் குற்றச்சாட்டை நிராகரித்த நைஜீரியா


அபுஜா, 4 நவம்பர் (ஹி.ச.)

மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில், திட்டமிட்ட கிறிஸ்துவ இனப்படுகொலை நடப்பதாக சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தார்.

மேலும், இதை தடுக்க தவறினால், அந்நாடு மீது போர் தொடுக்க தயாராக இருக்குமாறு அமெரிக்க போர் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இது குறித்து நைஜீரிய அரசு தெரிவித்திருப்பதாவது:

அனைத்து மதத்தினரும் எங்கள் நாட்டில் சமமாக நடத்தப்படுகின்றனர். எந்தவொரு குறிப்பிட்ட மதத்தவர் மீது இனப்படுகொலை எதுவும் மேற்கொள்ளவில்லை. பயங்கரவாதம், கொள்ளை மற்றும் குற்றச் செயல்கள் உள்ளிட்ட சிக்கலான பிரச்னைகளால், நாட்டில் வன்முறைகள் அதிகரித்து வருகிறது.

நைஜீரியா ஒரு இறையாண்மை கொண்ட நாடாகும். தன்னிச்சையாக ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்பதை அமெரிக்காவுக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம். பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு மற்றும் நைஜீரியாவின் பாதுகாப்பு நிலைமை குறித்த தவறான புரிதல்களை சரிசெய்ய, அமெரிக்காவுடன் பேச்சு நடத்த தயாராக உள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / JANAKI RAM