இனி பேஸ்புக் போல வாட்ஸ் அப்பிலும் கவர் ஃபோட்டோ போடலாம் - புதிய அம்சம் அறிமுகம்
சென்னை, 4 நவம்பர் (ஹி.ச.) சமூக ஊடகங்கள் மற்றும் சேட் செயலிகளில் ப்ரொஃபைல்களுக்கு ஒரு பர்சனல் டச் கொடுப்பது இப்பொது ஒரு டிரெண்டாக உள்ளது. முன்னணி சேட் தளமான வாட்ஸ்அப் இந்த திசையில் ஒரு முக்கிய படியை எடுத்து வருகிறது. முன்பு பயனர்கள் இதில் ஒரு ப்ரொ
இனி பேஸ்புக் போல வாட்ஸ் அப்பிலும் கவர் ஃபோட்டோ போடலாம் - புதிய அம்சம் அறிமுகம்


சென்னை, 4 நவம்பர் (ஹி.ச.)

சமூக ஊடகங்கள் மற்றும் சேட் செயலிகளில் ப்ரொஃபைல்களுக்கு ஒரு பர்சனல் டச் கொடுப்பது இப்பொது ஒரு டிரெண்டாக உள்ளது.

முன்னணி சேட் தளமான வாட்ஸ்அப் இந்த திசையில் ஒரு முக்கிய படியை எடுத்து வருகிறது. முன்பு பயனர்கள் இதில் ஒரு ப்ரொஃபைல் ஃபோட்டோவை மட்டுமே வைக்க முடியும். ஆனால், இப்போது பேஸ்புக் மற்றும் லிங்க்ட்இன் போல, வாட்ஸ்அப்பிலும் ஒரு கவர் ஃபோட்டோ வைப்பதற்கான அம்சத்தையும் சேர்க்கும் வசதியை அளிக்க நிறுவனம் தயாராகி வருகிறது.

இந்த புதிய அம்சம் அவர்களின் சேட் அனுபவத்தின் சுவாரஸ்யத்தை இன்னும் அதிகரிக்கும்.

வாட்ஸ்அப் அதன் பயனர்களுக்கு மற்றொரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதாக WABetaInfo கூறியுள்ளது. விரைவில், பயனர்கள் WhatsApp செயலியில் ஒரு கவர் ஃபோட்டோ போடுவதற்கான ஆப்ஷன் கிடைக்கும்.

தற்போது, ​​இந்த அம்சம் வாட்ஸ்அப் வணிகக் கணக்குகளுக்கு மட்டுமே கிடைக்கிறது. ஆனால் நிறுவனம் படிப்படியாக அதை அனைத்து பயனர்களுக்கும் விரைவில் வெளியிடக்கூடும்.

பயனர்கள் தங்கள் ப்ரொஃபைலில் ஒரு கவர் ஃபோட்டோவை சேர்க்க அனுமதிக்கும் ஒரு புதிய அம்சத்தை வாட்ஸ்அப் சோதித்து வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த புகைப்படம் Facebook அல்லது LinkedIn -இல் உள்ளதைப் போலவே அவர்களின் ப்ரொஃபைலில் தோன்றும். பயனர்கள் தங்கள் ப்ரொஃபைல் செட்டிங்கிற்குள் சென்று தங்கள் விருப்பப்படி ஒரு புகைப்படத்தைப் பதிவேற்ற முடியும். இது அவர்களின் வாட்ஸ்அப் ப்ரொஃபைலை இன்னும் பர்சனலாகவும் கவரக்கூடியதாகவும் மாற்றும்.

WhatsApp அதன் புதிய அம்சத்தில் தனியுரிமை அமைப்புகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளதாக WABetaInfo அறிக்கை தெரிவிக்கின்றது. பயனர்கள் கவர் ஃபோட்டோவை யார் பார்க்கலாம், பார்க்கக்கூடாது என்பதைத் தேர்வுசெய்யும் விருப்பம் இருக்கும்.

இந்த அம்சத்தில் பயனர்களுக்கு மூன்று விருப்பங்கள் வழங்கப்படலாம்:

Everyone

My Contacts

Nobody

இந்த அமைப்புகள் WhatsApp-ன் Status மற்றும் Profile Photo தனியுரிமை விருப்பங்களைப் போலவே இருக்கும்.

WhatsApp -இன் இந்த புதிய அம்சம் தற்போது சோதனை கட்டத்தில் உள்ளது. இந்த புதிய அம்சம் தற்போது WhatsApp பீட்டா பதிப்பு 2.25.32.2 இல் Android பயனர்களுக்காக சோதிக்கப்படுகிறது. இது இன்னும் அனைவருக்கும் வெளியிடப்படவில்லை.

ஆனால் எதிர்கால புதுப்பிப்புகளில் படிப்படியாக அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் புதுப்பிப்பின் மூலம், WhatsApp வணிக பயனர்கள் மட்டுமல்லாமல், அனைத்து பயனர்களும் தங்கள் ப்ரொஃபைல்களை கவர் ஃபோட்டோ மூலமாக இன்னும் பர்சனலைஸ் செய்யலாம்.

Hindusthan Samachar / JANAKI RAM