பிரதமர் மோடி இந்திய மகளிர் கிரிக்கெட் அணியுடன் நாளை சந்திப்பு
புதுடெல்லி, 4 நவம்பர் (ஹி.ச.) ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முதல் முறையாக உலக கோப்பையை வென்று புதிய வரலாறு படைத்தது. நவிமும்பையில் நடந்த இறுதி போட்டியில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்திய வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் பட
நாளை பிரதமர் மோடி இந்திய மகளிர் கிரிக்கெட் அணியுடன் சந்திப்பு


புதுடெல்லி, 4 நவம்பர் (ஹி.ச.)

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முதல் முறையாக உலக கோப்பையை வென்று புதிய வரலாறு படைத்தது.

நவிமும்பையில் நடந்த இறுதி போட்டியில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்திய வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

ஒட்டுமொத்த தேசத்தையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய இந்திய பெண்கள் அணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், உலக கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணியினரை பிரதமர் மோடி நாளை (5-ம் தேதி) சந்திக்கிறார்.

அப்போது அவர் தனது பாராட்டுகளை வீராங்கனைகளுக்கு தெரிவிப்பார்.

Hindusthan Samachar / JANAKI RAM