பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட மயானத்தை அபகரிக்க முயற்சி - ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
ராமநாதபுரம், 4 நவம்பர் (ஹி.ச.) ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் அருகே உள்ளது கைலாச சமுத்திரம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள பட்டியலின மக்கள் இறந்தவர்கள் உடலை புதைப்பதற்கு கடந்த 1985 ஆம் வருடம் 25 சென்ட் நிலம் வழங்கப்பட்டு கடந்த 40 ஆண்டுகளாக
Ramnad Collectorate Office


ராமநாதபுரம், 4 நவம்பர் (ஹி.ச.)

ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் அருகே உள்ளது கைலாச சமுத்திரம் கிராமம்.

இந்த கிராமத்தில் உள்ள பட்டியலின மக்கள் இறந்தவர்கள் உடலை புதைப்பதற்கு கடந்த 1985 ஆம் வருடம் 25 சென்ட் நிலம் வழங்கப்பட்டு கடந்த 40 ஆண்டுகளாக அந்த மயானத்தில் உடல்கள் புதைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலை துறையினர் 12 சென்ட் நிலத்தை நெடுஞ்சாலைத்துறையினர் எடுத்துக் கொண்டனர். இந்த நிலையில் மீதமுள்ள பகுதியில் தான் தற்போது மயானம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆர்எஸ் மங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் பாதை அமைப்பதற்கு மயான நிலத்தை ஆக்கிரமிக்கும் பணியில் ஆர்எஸ் மங்கலம் வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

பட்டியலின மக்களின் மயானத்தை அபகரிக்க திட்டமிடும் ஆர் எஸ் மங்கலம் வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகளை கண்டித்து ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தை கைலாச சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Hindusthan Samachar / ANANDHAN