பேருந்துகள், கார் கண்ணாடிகளை உடைத்ததாக 7 பேர் கைது - ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி எச்சரிக்கை
ராமநாதபுரம், 4 நவம்பர் (ஹி.ச.) ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியில் நேற்று இரவு சாலை மறியலில் ஈடுபட்ட போது தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு அரசு பேருந்துகள் மற்றும் 3 கார்களின் கண்ணாடிகளை மற்றும் ஜன்னல்களை உடைத்து சமூக விரோதிகள் சேத
Prison


ராமநாதபுரம், 4 நவம்பர் (ஹி.ச.)

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியில் நேற்று இரவு சாலை மறியலில் ஈடுபட்ட போது தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு அரசு பேருந்துகள் மற்றும் 3 கார்களின் கண்ணாடிகளை மற்றும் ஜன்னல்களை உடைத்து சமூக விரோதிகள் சேதப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக சத்திரக்குடி காவல் நிலையத்தில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனிப்படை அமைத்து மீதமுள்ள குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஒற்றுமையை குலைக்கும் வகையிலும் அமைதியை குலைக்கும் வகையிலும் சமூக வலைதளங்களில் பதிவிடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. சந்தீஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்

Hindusthan Samachar / ANANDHAN