Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 4 நவம்பர் (ஹி.ச.)
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணா சுந்தர் இன்று மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது,
கோவை விமான நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு நடந்த சம்பவத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் பல்வேறு தடயங்களை சேகரித்து குற்றவாளிகளை தேடினர்.
குற்றவாளிகள் துடியலூர் அருகே வெள்ளலூரில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அவர்களை தனி படை போலீசார் சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது அவர்கள் போலீஸ் காரரை தாக்கி தப்ப முயன்றனர்.
அப்போது குறைந்தபட்ச ஆயுதமாக துப்பாக்கியை போலீசார் பயன்படுத்தி அவர்களை தற்காப்புக்காக கால்களில் சுட்டனர்.
அதன் பிறகு அவர்கள் மூன்று பேரையும் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் என்ற கருப்பசாமி (வயது 30). காளி என்ற காளீஸ்வரன் (வயது 21) குணா என்ற தவசி ( வயது 20) என்று தெரிய வந்தது.
இதில் சதீஷ் மற்றும் காளீஸ்வரனாகியோர் அண்ணன் தம்பிகள். குணா இவர்களின் தூரத்து உறவினர். இவர்கள் மூன்று பேரும் கோவை மாவட்டத்திற்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வந்து உள்ளனர். இருகூரில் தங்கி இருந்து கட்டிட வேலை மரம் வெட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்கு சென்று வந்து உள்ளனர்.
3 பெருக்கும் திருமணம் ஆகவில்லை. இவர்கள் மீது கிணத்துக்கடவில் ஒரு கொலை வழக்கு மற்றும் கே.ஜி சாவடி பகுதியில் திருட்டு வழக்கு துடியலூரில் அடிதடி வழக்கு சத்தியமங்கலத்தில் திருட்டு வழக்கு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
சமீபத்தில் சத்தியமங்கலத்தில் நடந்த திருட்டு வழக்கில் ஜாமீனில் சிறையில் இருந்து விடுதலை ஆகி வந்து உள்ளனர்.
நேற்று இருகூரில் 3 பெரும் மது அருந்தி உள்ளனர். அதன் பிறகு மீண்டும் மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
அப்போது பெண் பலாத்கார சம்பவத்தில் அவர்கள் ஈடுபட்டு உள்ளனர். இந்த வழக்கில் தனிப்படை போலீசார் அந்தப் பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதன் பிறகு பல்வேறு தகவல்களை திரட்டி அதன் அடிப்படையில் குற்றவாளிகளை மடக்கி பிடித்து உள்ளனர்.
போலீசார் சுட்டதில் காளீஸ்வரன் கருப்பசாமி ஆகியோருக்கு கால்களில் காயம் ஏற்பட்டு உள்ளது.
இந்த சம்பவத்தில் ஆண் நண்பரை அவர்கள் அரிவாள் போன்ற ஆயுதத்தால் தாக்கி உள்ளனர். கார் கண்ணாடியை கல்லால் உடைத்து உள்ளனர்.
சம்பவ இடத்தில் போலீசார் 10:30 மணிவரை ரோந்து சென்று உள்ளனர். அதன் பிறகு தான் இந்த சம்பவம் நடந்து உள்ளது. பீளமேடு போலீஸ் நிலையத்தை பொருத்தவரை அங்கு 4 போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளார்கள். சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரும் கணபதி உள்ளிட்ட பகுதிகளில் மாலை நேரங்களில் சுற்றி உள்ளனர். அதன் பிறகு தான் அவர்கள் இங்கு சம்பவ இடத்திற்கு வந்து உள்ளனர். இவர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உள்ளோம். அவர்களை நேற்று இரவு கைது செய்து உள்ளோம்.
இந்த வழக்கில் சி.சி.டி.வி காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களை திரட்டி உள்ளோம்.
இவர்கள் இந்த பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் இவர்களுக்கும் முன்பு தொடர்பு இருந்ததா மற்றும் அவர்களை திட்டமிட்டு 3 மூன்று பேரும் தாக்கி சம்பவத்தை நடத்தினார்கள் என்ற விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அவ்வாறு இல்லை என்று தெரியவந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது துணை போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Hindusthan Samachar / V.srini Vasan