இந்தியா பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் கோப்பையை வென்றதை கொண்டாடும் விதமாக அரசு மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கிய கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர்
கோவை, 4 நவம்பர் (ஹி.ச.) பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், சிறப்பாக விளையாடி உலக கோப்பையை இந்தியா வென்றது. அனைவராலும் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், கோவை இராமநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு, கோவ
To celebrate the Indian women’s cricket team winning the World Cup, Coimbatore City District DMK Secretary Durai. Senthamizh Selvan distributed sweets to students of government and municipal schools.


கோவை, 4 நவம்பர் (ஹி.ச.)

பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், சிறப்பாக விளையாடி உலக கோப்பையை இந்தியா வென்றது.

அனைவராலும் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், கோவை இராமநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு, கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை. செந்தமிழ்ச் செல்வன் இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்.

முன்னதாக பேசிய மாவட்ட பொறுப்பாளர் துரை செந்தமிழ்ச் செல்வன்;-

பெண்களால் எதுவும் சாதிக்க முடியும் என்பதை உலக கோப்பையை வென்று நமது இந்திய பெண் வீராங்கனைகள் சாதித்துள்ளனர்.

தமிழக அரசு விளையாட்டு துறைக்கு ஊக்கம் அளித்து வருவது மட்டும்மல்ல, பெண்களின் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை வழங்கி பெண்களை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்கின்றது.

நமது துணை முதல்வர் அவர்கள் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளித்தும் வேண்டிய உதவிகளை செய்து, நாட்டில் விளையாட்டு துறையில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றி உள்ளார்.என்றார்,

இந் நிகழ்வில், மாநகராட்சி நிலைக்குழு தலைவர் சாந்தி முருகன், திமுக பொதுக்குழு உறுப்பினர் முமச.முருகன், பகுதி கழக செயலாளர் பசுபதி, வார்டு செயலாளர் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / V.srini Vasan