சாத் பண்டிகையை அவமதித்தவர்களை பீஹார் மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் - மத்திய அமைச்சர் அமித்ஷா
பாட்னா, 4 நவம்பர் (ஹி.ச.) பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி தற்போது நடைபெற்று வருகின்றது. அங்கு வரும் 6ல், முதல் கட்டமாக, 121 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக நடைபெறும் 121 தொகுதிகளு
சாத் பண்டிகையை அவமதித்தவர்களை பீஹார் மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் - மத்திய அமைச்சர் அமித்ஷா


பாட்னா, 4 நவம்பர் (ஹி.ச.)

பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி தற்போது நடைபெற்று வருகின்றது. அங்கு வரும் 6ல், முதல் கட்டமாக, 121 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக நடைபெறும் 121 தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்வடைகிறது.

இந்நிலையில் இன்று

(நவ 04) தர்பனில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:

லாலு பிரசாத் யாதவ் மற்றும் ராப்ரி தேவியின் 15 ஆண்டு கால ஆட்சியின் போது, பீஹாரை பேரழிவிற்கு உட்படுத்திய காட்டாட்சி ராஜ்யத்தை தடுக்க தாமரை சின்னம் இருக்கும் பட்டனை மக்கள் அனைவரும் அழுத்த வேண்டும்.

3.60 கோடி மக்கள் ரூ.5 லட்சம் வரை இலவச சுகாதார காப்பீட்டைப் பெறுகிறார்கள். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க தர்பங்காவில் ஐடி பூங்கா அமைக்கப்படும். சாத் பண்டிகையை அவமதித்தவர்களை பீஹார் மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி பீஹார் தேர்தலில் துடைத்தெறியப்படும்.ராகுல் மற்றும் லாலு பிரசாத் யாதவ் ஊடுருவல்காரர்களை ஆதரிக்கின்றனர்.

நாங்கள் ஒவ்வொரு சட்டவிரோத குடியேறிகளையும் விரட்டுவோம். நீங்கள் அனைவரும் நவம்பர் 06ம் தேதி தாமரை சின்னம் இருக்கும் பட்டனை அழுத்தி, எங்கள் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்.

காட்டாட்சி ராஜ்ஜியத்தை துடைத்தெறிய தேஜ கூட்டணிக்கு மக்கள் அனைவரும் ஓட்டளிக்க வேண்டும். ஆர்ஜேடியின் காட்டாட்சி ராஜ்யத்தை மீண்டும் மாறுவேடத்தில் கொண்டு வர முயற்சி நடக்கிறது.

இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Hindusthan Samachar / vidya.b