Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 4 நவம்பர் (ஹி.ச.)
இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானத்தில் இன்று(நவ 04) மாலை 6 மணிக்கு கோவை வருகை தர உள்ளார்.
பின்னர் காரில் புறப்பட்டு கோவை அடுத்துள்ள பிளிச்சி ஒன்னிபாளையம் ஸ்ரீ எல்லை கருப்புராயன் கோயிலில் நடைபெறும் 10,008 பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்கிறார்.
விழாவை முடித்துக்கொண்டு மீண்டும் கோவை விமான நிலையம் வந்தடையும் துணை ஜனாதிபதி இரவு 9.40 மணிக்கு விமானம் மூலம் ராஜ்பூர் சென்றடைகிறார்.
துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி கோவை மாவட்டம் ஒன்னிபாளையம் கருப்பராயன் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், பெரியநாயக்கன்பாளையம், கோவில்பாளையம் ஆகிய பகுதிகள் மற்றும் மிக முக்கிய விருந்தினர் பயணிக்கும் சாலைகள் ஆகியவை சிவப்பு மண்டல பகுதிகளாக அறிவிக்கப்படுகிறது.
மேற்கண்ட பகுதிகளில் இன்று இரவு 8 மணி வரையில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அறிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b