Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 5 நவம்பர் (ஹி.ச.)
தனது வழக்கமான கதாபாத்திரங்களில் இருந்து விலகி, மிகவும் எதிர்பார்க்கப்படடும் அதிரடி திரில்லர் படமான 'பிரிடேட்டர்: பேட்லேண்ட்'ஸில் தனது முன்னணி கதாபாத்திரத்திற்காக நடிகை எல்லே ஃபான்னிங் ஒரு மாத காலம் கடினமான ஸ்டண்ட் பயிற்சிகளை கற்றுக்கொண்டார்.
அத்லெட்டான எல்லே உடல் ரீதியாக தேவைப்படும் அனைத்து உழைப்பையும் அர்ப்பணிப்பையும் இந்த ஸ்டண்ட் பயிற்சிக்கு கொடுத்துள்ளார். 'Never-done-before' எனப்படும் இதற்கு முன்பு செய்திடாத பல ஆச்சரியமூட்டும் ஸ்டண்ட் காட்சிகளை திரையில் கொண்டு வந்துள்ளார்.
தான் பயிற்சி பெற்ற ஸ்டண்ட் காட்சிகள் பற்றி எல்லே பகிர்ந்து கொண்டதாவது,
நிறைய ஸ்டண்ட் மற்றும் வொயர் வொர்க் பயிற்சிகள் செய்ய வேண்டியிருந்தது. அடிப்படையில் நான் ஒரு அத்லெட் என்பதால் வளரும்போதே நிறைய விளையாட்டுகளில் பங்கேற்று இருக்கிறேன்.
என் முழு உடலையும் ஏதோவொன்றில் ஈடுபடுத்துவதை நான் ரசிக்கிறேன். ஸ்டண்ட் பயிற்சி என்பதையும் தாண்டி கடந்த ஒரு மாதம் எனக்கு தனிப்பட்ட முறையில் பிடித்ததாக அமைந்தது. ஆனால், வொயர் வொர்க்கிற்காக எனது உடலை நான் அதிகம் தயார்படுத்த வேண்டியிருந்தது.
வொயர் வொர்க் எனப்படும் இந்தப் பயிற்சியில் கம்பிகளில் இருப்பதற்கு வலிமை மிக அதிகம் தேவைப்படும். பயிற்சியின்போது டிமிட்ரியஸும் நானும் பின்னால் கம்பிகளைக் கட்டிக்கொண்டு காற்றில் பறந்தபடியே இருந்தோம். இதற்கு முன்பு நான் செய்திராத விஷயமாக இது இருந்தது. வீல்பேரோவை விஎஃப்எக்ஸ் மூலம் கொண்டு வர முடியும் என்றாலும் அதிலும் நான் கடின பயிற்சிகளை மேற்கொண்டேன் என்றார்.
'பிரிடேட்டர்: பேட்லேண்ட்ஸ்' திரைப்படம் நவம்பர் 7 ஆம் தேதி இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
Hindusthan Samachar / Durai.J