SIR பணிகளை 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு மேற்கொள்ள வேண்டும் - செல்வபெருந்தகை
சென்னை, 5 நவம்பர் (ஹி.ச.) தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை கைவிட்டு , 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்ள வேண்டும் என காங். கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை தலைமைச் செயலக வளாகத்
Selva


சென்னை, 5 நவம்பர் (ஹி.ச.)

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை கைவிட்டு , 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்ள வேண்டும் என காங். கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து மனு அளித்தார்,

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது,

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு போதுமான கால அவகாசம் இல்லாததால் ச.ம. தேர்தலுக்கு பிறகு நடத்த வேண்டும் என்று கூறினோம்.

இதில் உள்ள குளறுபடிகள் குறித்து கூறினோம் , தேர்தல் ஆணையத்திற்கு அவற்றை அனுப்புவதாக கூடுதல் தேர்தல் அதிகாரி எங்களிடம் கூறினார்.

2003 ல் மேற்கொள்ளப்பட்ட sir முறைப்படியே இப்போதும் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்ள வேண்டும் என கூறினோம்.

இப்போது நடைபெற்று வரும் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் 2003 ன் சரத்துகள் இல்லை.

மறைமுகமாக தேசிய குடிமக்கள் பதிவேட்டை நடைமுறைப்படுத்தும் விதமாக உள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை காங்.சார்பில் நாட உள்ளோம் என்று கூறினார்.

Hindusthan Samachar / P YUVARAJ