Enter your Email Address to subscribe to our newsletters

மயிலாடுதுறை, 5 நவம்பர் (ஹி.ச.)
மயிலாடுதுறை அடுத்த மாப்படுகை கிராமத்தில் மாப்படுகை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது. கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கி வரும் இந்த வங்கியில் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் 600க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்ட கூட்டுறவு துறை இணை இயக்குனரின் கட்டுப்பாட்டில் இந்த வங்கி இயங்கி வருகிறது. வங்கியின் செயலாளராக அன்பரசன் என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். இங்கு கிளர்க்காக பணிபுரியும் நித்யா என்பவர் வங்கியில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அடகு வைத்த நகைகளை வெளியில் மறு அடகு வைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த விவசாயிகள் குறைந்திருக்கும் கூட்டத்தில் இது குறித்து விவசாயிகள் புகார் மனு அளித்திருந்தனர். அதன்படி இந்த வங்கியில் பணி புரியும் நித்யா, பாலகிருஷ்ணன் ஆகியோர் மீது சட்டப்பிரிவு 81 ன் படி தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் காவல்துறை பொருளாதார குற்றப்பிரிவு மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணையில் நகைகளை அடகு வைத்து ஏமாந்த 17 பேர் நேரில் ஆஜராகி தங்கள் விளக்கங்களை அளித்தனர்.
நகைகளை மீட்க செல்லும் பொழுது பாதி நகைகளை மட்டுமே தந்ததாகவும், பல மாதங்களாக மீதி உள்ள நகைகளை தருவதாக கூறி நித்யா அலைக்கழித்ததாகவும், பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் கூலி வேலை செய்து கிடைத்த பணத்தை வங்கியில் சேமித்த வைத்தவர்களுக்கு தங்கள் பணம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மூதாட்டி ஒருவர் 50 ஆயிரம் ரூபாய் பணம் வைத்திருந்த நிலையில் பத்தாயிரம் மட்டுமே இருப்பு உள்ளது. இவரும் தனது புகாரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தெரிவித்துள்ளார். இதுபோல் போலியாக விவசாய கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும், கடன் வாங்கி கடனை திருப்பி செலுத்திய அவர்களுக்கு பணம் வங்கியில் கட்டப்படாமல் மோசடி நடைபெற்றுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இதுவரை 75 சவரனுக்கு மேல் அடகு வைத்த நகைகள் காணவில்லை என புகார் எழுந்துள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN