Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 5 நவம்பர் (ஹி.ச.)
சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற வந்த எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வாக்காளர் பட்டியல் திருத்த பணி, தேர்தலுக்கான ஆயத்த பணிகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பங்கேற்க காலை 10:45 மணி அளவில் எடப்பாடி பழனிசாமி வந்தார். அவருக்கு அதிமுக தலைமையகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலையில் அதிமுக நிர்வாகிகள் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பெண்கள் சிலர் பூசணிக்காய் உடைத்தும், தேங்காய் உடைத்தும், ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர். இன்னும் சிலர்
எடப்பாடி பழனிச்சாமியின் கார் மீது பூக்களைப் தூவி அவரை ஊர்வலமாக கட்சி அலுவலகத்துக்குள் அழைத்துச் சென்றனர்
அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி கட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் ஜெயலலிதா சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து லிப்ட் மூலம் கட்சி அலுவலகத்தின் முதல் மாடிக்கு சென்று, தொண்டர்களை நோக்கி இரட்டை விரலை காண்பித்து கை அசைத்தார்.
அப்போது அலுவலக வளாகத்தில் கூடியிருந்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமி வாழ்க வருங்கால முதலமைச்சர் வாழ்க என்று ஆரவாரத்துடன் கோஷம் எழுப்பினார்கள்.
Hindusthan Samachar / P YUVARAJ