Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 5 நவம்பர் (ஹி.ச.)
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மதுரையில் நடந்த முத்துராமலிங்க தேவர் நினைவு நாள் நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், மற்றும் சசிகலா ஆகியவரை சந்தித்து பேசியதால் அவரை அ.தி.மு.க வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக நீக்கினார்.
இந்த நிலையில் இதை எதிர்த்து வழக்கு தொடர போவதாக கே.ஏ செங்கோட்டையன் கூறி உள்ளார்.
மேலும் இரட்டை இலை சின்னம் விவகாரத்திலும் அவர் மனு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பதிலடி கொடுத்து வருகிறார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில்இன்று காலைகோவை விமான நிலையத்தில் முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறும்போது,
தற்போது என்ன நடக்கிறது என்பது எலாருக்கும் தெரியும் . நான் அ.தி.மு.க வில் 53 ஆண்டுகள் இருக்கிறேன் பா.ஜ.க என்னை இயக்க வில்லை. என்னை யாரும் இயக்க முடியாது. ஓ பன்னீர்செல்வம் அணியில் இருந்த மனோஜ் பாண்டியன் தி.மு.க விற்கு சென்றது அவரது விருப்பம்.
அ.தி.மு.க வில் எடப்பாடி பழனிச்சாமி மகன் தலையிடுகிறார். மைத்துனர் எல்லா பக்கமும் வருகிறார் மருமகன் தலையிடுகிறார்.
அவர்கள் தலையிடுவது மூத்த நிர்வாகிகளுக்கு இடையூறாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / V.srini Vasan