2028-ல் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ள 53 கிலோ பிரிவு பளுதுாக்கும் போட்டியில் பங்குபெற தயாராகும் மீராபாய் சானு!
புதுடெல்லி, 5 நவம்பர் (ஹி.ச.) 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பளுதூக்குதல் திட்டத்தை விரிவுபடுத்த சர்வதேச பளுதூக்குதல் கூட்டமைப்பு புதிய விதிகளை வகுத்துள்ளது. அதன்படி, பளுதுாக்கும் பிரிவில் 12 போட்டிகள் (ஆறு ஆண்கள், ஆறு பெண்கள்) போட்டியி
2028ல் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ள 53 கிலோ பிரிவு பளுதுாக்கும் போட்டியில் பங்குபெற தயாராகும் மீராபாய் சானு


புதுடெல்லி, 5 நவம்பர் (ஹி.ச.)

2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பளுதூக்குதல் திட்டத்தை விரிவுபடுத்த சர்வதேச பளுதூக்குதல் கூட்டமைப்பு புதிய விதிகளை வகுத்துள்ளது.

அதன்படி, பளுதுாக்கும் பிரிவில் 12 போட்டிகள் (ஆறு ஆண்கள், ஆறு பெண்கள்) போட்டியிடும் என்று அறிவித்துள்ளது. பிரிவுகள் மாற்றம் ஒரு ஆண்டிற்குள் 2வது முறை செய்யப்பட்டுள்ளது.

இந்திய பளுதுாக்கும் வீராங்கனையான மீராபாய் சானு, டோக்கியோ ஒலிம்பிக்கில் 49 கிலோ பிரிவில் சானு வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். அவர் 2028 லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக்போட்டியில் பங்கேற்க உள்ளார்.

இது குறித்து தலைமை தேசிய பயிற்சியாளர் விஜய் சர்மா கூறியதாவது:

2028 ல் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் பங்கேற்க மீராபாய் 31, 53 கிலோ பிரிவில் போட்டியிடத் தயாராகி வருகிறார்.அடுத்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டி வரை அவர் தனது தற்போதைய 48/49 கிலோ பிரிவில் தொடர்ந்து போட்டியிடுவார்.

ஆனால் மணிப்பூரில் அடுத்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டி வரை தனது பழைய எடைப் பிரிவிலேயே தொடருவார்.

இவ்வாறு விஜய் சர்மா கூறினார்.

Hindusthan Samachar / JANAKI RAM