ஆம்னி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - ஒருவர் உயிரிழப்பு 7 பேர் படுகாயம்
நாமக்கல், 5 நவம்பர் (ஹி.ச.) பெங்களூரில் இருந்து கொடைக்கானலுக்கு 18 பயணிகளுடன் சென்ற பேருந்து சேலம், கரூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக இன்று (நவ 05) அதிகாலை 3மணி அளவில் பரமத்தி அடுத்து ராசாம்பாளையம் டோலக்ட் கடந்து சென்று கொண்டிருந்தது. அதனை தொட
ஆம்னி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - ஒருவர் உயிரிழப்பு 7 பேர் படுகாயம்


நாமக்கல், 5 நவம்பர் (ஹி.ச.)

பெங்களூரில் இருந்து கொடைக்கானலுக்கு 18 பயணிகளுடன் சென்ற பேருந்து சேலம், கரூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக இன்று (நவ 05) அதிகாலை 3மணி அளவில் பரமத்தி அடுத்து ராசாம்பாளையம் டோலக்ட் கடந்து சென்று கொண்டிருந்தது.

அதனை தொடர்ந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய கிராமுடு அருகே மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் அவ்வழியாக வரும் பேருந்துகள் அணுகசாலையில் திருப்பி அனுப்பப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆம்னி பேருந்தும் திருப்பி அனுபப்படட்டது.

ஆம்னி பேருந்து திரும்பும் போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயமான பயணிகளை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பயணி ஒருவர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 7 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b