சபரிமலை சன்னிதானத்தில் தங்கும் அறைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் தொடக்கம்!
திருவனந்தபுரம், 5 நவம்பர் (ஹி.ச.) சபரிமலையில் சீசனையொட்டி மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 16-ந் தேதி மாலை திறக்கப்படுகிறது. 17-ந் தேதி முதல் சீசன் தொடங்குகிறது. இந்தநிலையில் திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்பட்டுள
இன்று முதல் சபரிமலை சன்னிதானத்தில் தங்கும் அறைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்


திருவனந்தபுரம், 5 நவம்பர் (ஹி.ச.)

சபரிமலையில் சீசனையொட்டி மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 16-ந் தேதி மாலை திறக்கப்படுகிறது.

17-ந் தேதி முதல் சீசன் தொடங்குகிறது.

இந்தநிலையில் திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சீசனை முன்னிட்டு பூஜை, வழிபாடுகளுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.

அதே போல் சன்னிதானத்தில் தங்குவதற்கு அறைகளுக்கான ஆன்லைன் முன்பதிவும் இன்று முதல் தொடங்கும். முன்பதிவு செய்ய விரும்புவோர் https://www.onlinetdb.com என்ற இணைய தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM