Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 5 நவம்பர் (ஹி.ச.)
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் பாரதி நகரைச் சேர்ந்த இமானுவேல் ஜேம்ஸ் (24) என்ற பட்டத்தாரி இளைஞர் நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழரசு என்பவர் பணத்தை எடுத்துச் சென்றதாக தெரிகிறது.
இதனால் இந்த நிறுவனத்தில் பணம் செலுத்தி வந்த பொதுமக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு இமானுவேல் ஜேம்ஸ் மீது வெலிங்டன் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
இதனையடுத்து இம்மானுவேல் ஜேம்ஸ் கைது செய்யப்பட்டார்.
சிறை தண்டனைக்கு பிறகு வெளியே வந்த இம்மானுவேல் ஜேம்ஸ் நிதி நிறுவனத்தில் பொதுமக்கள் முதலீடு செய்த பணத்தை தான் எடுக்கவில்லை நிறுவனத்திலிருந்து தமிழரசு என்பவர் எடுத்துச் சென்று விட்டார் என போலீசாரிடம் தொடர்ந்து கூறி வந்தார்.
இந்த நிலையில் இன்று உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த இமானுவேல் ஜேம்ஸ் திடீரென அவரது பையில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து உடல் மீது ஊற்றிக் கொண்டார்.
உடலில் பெட்ரோல் ஊற்றப்பட்ட நிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் லைட்டருடன் இம்மானுவேல் ஜேம்ஸ் நின்றதால் அருகில் யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அரை மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தி லைட்டரை கீழே வீசும் படி கூறினர்.
அதன் பின்பு இமானுவேல் ஜேம்ஸ் மீது தண்ணீரை ஊற்றிய போலீசார் அவரை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN