அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்திய பாமக தலைவர் அன்புமணி உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு
நெல்லை, 5 நவம்பர் (ஹி.ச.) பாமக தலைவர் அன்புமணி, நெல்லை மாவட்டம் சிந்து பூந்துறை பகுதிக்கு வந்து அக்டோபர் 7ம் தேதி தாமிரபரணி நதியில் கழிவு நீர் கலக்கும் இடத்தை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த மக்கள் மற்றும் கட்சியினரை திரட்டி அ
Anbumani


நெல்லை, 5 நவம்பர் (ஹி.ச.)

பாமக தலைவர் அன்புமணி, நெல்லை மாவட்டம் சிந்து பூந்துறை பகுதிக்கு வந்து அக்டோபர் 7ம் தேதி தாமிரபரணி நதியில் கழிவு நீர் கலக்கும் இடத்தை பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த மக்கள் மற்றும் கட்சியினரை திரட்டி அனுமதி இன்றி தாமிரபரணியை காப்பாற்ற வேண்டும் எனக் கூறி கோஷம் எழுப்பி திடீரென ஒரு ஆர்ப்பாட்டத்தை அன்புமணி நடத்தினார்.

இதை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் எதிர்பாராமல் அதிர்ச்சியில் திகைத்தனர். அதனைத் தொடர்ந்து 1 மணி நேரத்திற்கு பிறகு அன்புமணி ஆர்ப்பாட்டத்தை நடத்தி முடித்த பின் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

காவல்துறையில் முறையாக அனுமதி பெறாமல் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தியதால் நெல்லை ஜங்ஷன் காவல்துறையினர் பாமக தலைவர் அன்புமணி உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர்.

சம்மன் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN