சாலையில் கிடந்த ரூ. 2.38 லட்சத்தை ஒப்படைத்த பரோட்டா மாஸ்டருக்கு போலீசார் பாராட்டு
புதுச்சேரி, 5 நவம்பர் (ஹி.ச.) புதுச்சேரியில் தவளக்குப்பம் அடுத்த தானம்பாளையம் நல்லவாடு ரோடு பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் தனது மகளின் மஞ்சள் நீராட்டு விழாவை கடந்த 2-ம் தேதி நடத்தியுள்ளார். அதில் வந்த மொய் பணம் ரூ.2 லட்சத்து 38 ஆயிரத்தின் மூ
சாலையில் கிடந்த ரூ. 2.38 லட்சத்தை ஒப்படைத்த பரோட்டா மாஸ்டருக்கு போலீசார் பாராட்டு


புதுச்சேரி, 5 நவம்பர் (ஹி.ச.)

புதுச்சேரியில் தவளக்குப்பம் அடுத்த தானம்பாளையம் நல்லவாடு ரோடு பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் தனது மகளின் மஞ்சள் நீராட்டு விழாவை கடந்த 2-ம் தேதி நடத்தியுள்ளார்.

அதில் வந்த மொய் பணம் ரூ.2 லட்சத்து 38 ஆயிரத்தின் மூலம் அரியாங்குப்பத்தில் அடகு வைத்த நகையை மீட்க முடிவு செய்த விஜயகுமார் இதற்காகப் பணத்தை ஒரு பையில் வைத்துக்கொண்டு அரியாங்குப்பம் நோக்கி மோட்டார் சைக்கிளில் இன்று (நவ 05) புறப்பட்டார்.

தவளக்குப்பத்தில் உள்ள பங்கில் பைக்கிற்கு பெட்ரோல் நிரப்பிய போது அவர் வைத்திருந்த பணப்பை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தவளைகுப்பம் காவல்துறையில் புகார் அளித்தார்.

இதனிடையே தவளக்குப்பம் பகுதியை சேர்ந்த பரோட்டா மாஸ்டர் சண்முகம், கீழே கிடந்த பணத்தை எடுத்து வந்து தவளக்குப்பம் போலீஸில் ஒப்படைத்தார். பின்பு அந்தப் பணம்

போலீஸார் முன்னிலையில் விஜயகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சாலையில் கிடந்த பணத்தை ஒப்படைத்த பரோட்டா மாஸ்டரின் நேர்மையை போலீஸார் பாராட்டி கவுரவித்தனர்.

Hindusthan Samachar / vidya.b