Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 5 நவம்பர் (ஹி.ச.)
உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்கள் கொண்டாடும் முதன்மையான பண்டிகை, குரு நானக் ஜெயந்தியாகும்.2025 ஆம் ஆண்டு வரும் குரு நானக் ஜெயந்தி, நானக் தேவ்வின் 556 வது பிறந்த நாள் ஆகும்.
ஒவ்வொரு வருடமும் கார்த்திகை பூர்ணிமா அன்று குருநானக் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. தமிழ் மாதங்களின் படி, ஐப்பசி மத பௌர்ணமி அன்று கொண்டாடப்படும். அந்த வகையில் இன்று
(நவ 05) வட மாநிலங்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் குருநானக் ஜெயந்தி பிரகாஷ் புரப் என்றும் அழைக்கப்படுகிறது.
குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று (நவ 05) எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,
ஸ்ரீ குருநானக் தேவ் ஜியின் வாழ்க்கையும் செய்தியும் மனிதகுலத்தை நித்திய ஞானத்துடன் தொடர்ந்து வழிநடத்துகின்றன.
கருணை, சமத்துவம், பணிவு மற்றும் சேவை பற்றிய அவரது போதனைகள் மிகவும் ஊக்கமளிக்கின்றன.
அவரது பிரகாஷ் புரப் தினத்திற்கு வாழ்த்துக்கள். அவரது தெய்வீக ஒளி நமது கிரகத்தை என்றென்றும் ஒளிரச் செய்யட்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b