Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 5 நவம்பர் (ஹி.ச.)
திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி செல்லும் பயணிகள் ரயில் வழக்கம் போல் இன்று காலை திருச்சியில் இருந்து கிளம்பி தற்போது ராமநாதபுரம் ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது
இந்த நிலையில் ரயில் புறப்பட்டு ரயில்வே நிலையத்தை தாண்ட முற்படும்பொழுது அந்த வழியாக வந்த நபர் ஒருவர் திடீரென ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது
அப்போது ராமேஸ்வரத்திற்கு புறப்பட தயாராக இருந்து புறப்பட்ட அடுத்த வினாடியே ரயிலில் அடிபட்டு படு காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தவரை பார்த்த ரயில்வே போலீசார் மற்றும் பொதுமக்கள் அவரை மீட்டு அவசர ஊர்தி மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது
ரயில் புறப்பட்டு சென்ற அடுத்த நொடி முதியவர் ஒருவர் ரயிலில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து ரயில்வே போலீசார் மற்றும் பி-1 நகர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அடிபட்ட நபர் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றாரா அல்லது தற்கொலைக்கு முயன்றாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அவர் வெளிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த பிரபல ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர் மோகன் என்பது தெரிய வந்துள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN