கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது
சென்னை, 5 நவம்பர் (ஹி.ச.) சென்னை திரு.வி.க. நகர், ராயபுரம் மண்டலங்கலைச் சேர்ந்த ஏராளமான தூய்மை பணியாளர்கள் மெரினா கடற்கரைச் சாலையில் இன்று (நவ 05) காலை 7 மணியளவில் குழுமினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். அதன் பி
கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது


சென்னை, 5 நவம்பர் (ஹி.ச.)

சென்னை திரு.வி.க. நகர், ராயபுரம் மண்டலங்கலைச் சேர்ந்த ஏராளமான தூய்மை பணியாளர்கள் மெரினா கடற்கரைச் சாலையில் இன்று (நவ 05) காலை 7 மணியளவில் குழுமினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர்.

அதன் பிறகு சர்வீஸ் சாலையில் தூய்மை பணியாளர்கள் குழுனர். இவர்களில் முதற்கட்டமாக 50 பேரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து மற்றவர்கள் கடலில் இறங்கி தூய்மை பணிகளை தனியார் மயமாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உரிய அனுமதியின்றி கடலில் இறங்கி போராட்டம் நடத்தியதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை போலீசார் கைது செய்து அருகில் உள்ள சமுதாயக் கூடங்களில் அடைத்தனர்.

அதே சமயம் காலை 10 மணி அளவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், காமராஜர் சாலை வழியாக அவரது வீட்டிலிருந்து தலைமைச்செயலகம் செல்லக்கூடிய நிலையில் அவரது வாகனத்தை மறித்து தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டதாகவும் தகவல் வெளியான நிலையில் காவல்துறையினர் அங்கு ஏராளமானோர் குவிக்கப்பட்டனர்.

Hindusthan Samachar / vidya.b