முதலீடுகளை ஈர்க்க நீங்கள் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வதில் யாருக்கு என்ன பயன்? – நயினார் நாகேந்திரன்
சென்னை, 5 நவம்பர் (ஹி.ச.) நாமக்கல்லில் குளிரூட்டப்பட்ட முட்டை சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே? என்று பாஜக மாநில நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவ
Nainar


Tweet


சென்னை, 5 நவம்பர் (ஹி.ச.)

நாமக்கல்லில் குளிரூட்டப்பட்ட முட்டை சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே? என்று பாஜக மாநில நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

கடந்த நான்கரை ஆண்டுகளாகத் தொழில்வரி உயர்வு, விலைவாசி உயர்வு, மின்சாரக் கட்டண உயர்வு உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டுள்ள நாமக்கல் மாவட்டத்தின் கோழிப்பண்ணை மற்றும் முட்டை உற்பத்தியை மீட்டெடுக்கவும், அத்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் உங்கள் அரசு என்ன செய்தது? முட்டை உற்பத்தி உச்சத்தை அடைந்த போதிலும் கடும் வெப்பநிலை காரணமாக முட்டைகள் சேதமடைந்து, ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதே இதுதான் திமுக அரசின் நிர்வாக லட்சணமா?

டெல்டா மாவட்டங்களில் நெல் மூட்டைகள் முளைப்பு கட்டி வீணாகின்றன, கொங்கு மாவட்டங்களில் முட்டைகள் அழுகிப்போகின்றன.

உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிப்பதை விட்டுவிட்டு முதலீடுகளை ஈர்க்க நீங்கள் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வதில் யாருக்கு என்ன பயன்? என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ