கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் - கோவை வடக்கு கோட்டாட்சியர் விசாரணை
கோவை, 5 நவம்பர் (ஹி.ச.) கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கோவை வடக்கு கோட்டாட்சியர் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்திச் சென்றுள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள பொது மருத்துவம் மற்றும் அறுவை சிகி
The Coimbatore North Revenue Divisional Officer visited and conducted an inquiry with the arrested persons in connection with the college student sexual assault case.


கோவை, 5 நவம்பர் (ஹி.ச.)

கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கோவை வடக்கு கோட்டாட்சியர் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்திச் சென்றுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள பொது மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை பிரிவில் கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் விசாரணை செய்து சென்றார்.

சுட்டு பிடிக்கப்பட்ட குணா என்கிற தவசி, சதீஷ் என்கிற கருப்பசாமி, கார்த்தி என்கிற காளீஸ்வரன் ஆகிய மூன்று பேர் அனுமதிக்கப்பட்ட வார்டுக்கு சென்று விசாரணை மேற்கொண்டு சென்றார்.

அவரிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு எந்த பதிலும் அளிக்காமல் சென்றார்.

Hindusthan Samachar / V.srini Vasan