Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 5 நவம்பர் (ஹி.ச.)
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்
மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. பல கல்குவாரிகள் அரசின் விதிகளை முறையாக பின்பற்றப்படவில்லை என கூறப்படுகின்றது.
குறிப்பாக மைவாடி பகுதிகளில் இரண்டு தனியாருக்கு சொந்தமான கல்குவாரிகள் அதிக அளவு கனிம வளங்களை வெட்டி உள்ள நிலையில் இதுகுறித்து உயர் நீதிமன்றத்திற்கு விவசாயிகள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
அதன் பெயரில் உடுமலை கோட்டாட்சியர் குமார் ஆய்வு செய்து இரண்டு கல் குவாரிகளுக்கும் ரூ.12 கோடி அபராதம் விதித்தார்.
மடத்துக்குளம் பகுதியில் சட்டத்துக்கு பொறுப்பாக கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. குறிப்பாக மைவாடி பகுதியில் நான்கு வழி சாலை மிக அருகாமையில் செயல்படும் கல்குவாரி மற்றும் மற்றுமொரு கல்குவாரி அரசின் விதிகளை முறையாக பின்பற்றப்படவில்லை.
இதனால் விவசாயிகள் புகார் தெரிவித்த நிலையில் கோட்டாட்சியர் ஆய்வு செய்து 15 மடங்கு அபராதம் விதிக்க வேண்டிய நிலையில், தற்பொழுது ஒரு மடங்கு மட்டும் அபராதம் விதித்துள்ளது.
அதாவது இரண்டு கல்குவாரிகளுக்கும் ரூ.75 கோடிக்கு மேல் அபராதம் விதிக்க வேண்டிய நிலையில், தற்பொழுது ரூ.12 கோடி மட்டும் அபராதம் விதித்துள்ளதால் அரசுக்கு 60 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் மேற்கண்ட கல்குவாரிகளில் அதிக அளவு வெடி மருந்து சட்ட விரோதமாக பயன்படுத்தப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN