Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 5 நவம்பர் (ஹி.ச.)
புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று (நவ 05) செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்,பி ராகுல் காந்தி ஹரியானாவில் உள்ள 2 கோடி வாக்காளர்களில், 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டன.
ஹரியானா தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாலேயே காங்கிரஸால் வெற்றிபெற முடியவில்லை என குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு குறித்து தேர்தல் ஆணைய வட்டாரத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,
ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு தொடர்பான குற்றச்சாட்டு ஆதாரமற்றது. அரியானாவில் வாக்காளர் பட்டியல்களுக்கு எதிராக எந்த மேல்முறையீடுகளும் தாக்கல் செய்யப்படவில்லை.
வாக்குப்பதிவுகளை மேற்பார்வையிடவும், முறைகேடுகள் நடந்தால் அதை தெரியப்படுத்தவும் ஒவ்வொரு அரசியல் கட்சி சார்பிலும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமிக்கப்படுகிறார்கள். பல பெயர்கள் விடுபட்டது குறித்து வாக்காளர் பட்டியல்
திருத்தத்தின்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பூத் கமிட்டி உறுப்பினர்கள் யாரும் ஏன் கேள்வி எழுப்பவில்லை? என்று தெரிவித்துள்ளார்.
இதே போல் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சரும் பாஜக மூத்த நிர்வாகியுமான கிரண் ரிஜிஜு பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக கிரண் ரிஜிஜு இன்று (நவ 05) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஹரியானாவில் காங்கிரஸ் முகவர்களே எந்தப் புகாரும் அளிக்கவில்லை. முறைகேடு புகார்களைத் தடுக்கும் வகையில் வாக்காளர் பட்டியல் பலமுறை சரிபார்க்கப்பட்டது. ராகுல் காந்தி பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருகிறார்.
தனது தோல்வி மற்றும் பலவீனங்களிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப முயற்சிக்கிறார். வாக்கு திருட்டு எனக் கூறி இளம் வாக்காளர்களை தூண்டி விடுகிறார். தனது பலவீனங்களை மறைக்க மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது ராகுல் காந்தி பழி போடுகிறார்.
உண்மையான பிரச்சினையை எதிர்கொள்வதற்கு பதிலாக கவனத்தைத் திசைதிருப்பும் உத்தியை கையாளுகிறார் ராகுல் காந்தி.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b