Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 5 நவம்பர் (ஹி.ச.)
இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் நேற்று இரவு கோவை வந்தடைந்தார்.
அவரை விமான நிலையத்தில் அவரை மாவட்ட ஆட்சியர், காவல் அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்,
இன்று ஆயிரக்கணக்கான தாய்மார்களுடன் இணைந்து விளக்கு பூஜையில் கலந்து கொள்வது பெரும் பாக்கியம். பெண்களின் நம்பிக்கையும், தெய்வீக அன்பும் எனக்கு வியப்பை அளிக்கிறது, என தெரிவித்தார்.
மேலும், சமீபத்தில் கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான விவகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு,
இது எந்த பெண்ணுக்கும் நடக்கக் கூடாத ஒரு கொடூரம். நம்முடைய கொங்கு மண்டலத்தில் நடந்துள்ளது என்பது தாங்க முடியாத வேதனையை தருகிறது. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவதும், அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தருவதும் காவல் துறையின் பொறுப்பு. அவர்கள் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு நீதியை வழங்குவார்கள் என்று நம்புகிறேன். சகோதரிக்கும் அவரது பெற்றோருக்கும் என் ஆழ்ந்த ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன், என்றார்.
அத்துடன், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாதவாறு சமூகம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். வருத்தத்தில் இருக்கும் குடும்பத்திற்குப் பக்கபலமாக நாம் அனைவரும் இருக்க வேண்டும்,” எனவும் அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, அவர் சாலை மார்க்கமாக மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஒன்னிபாளையம் பகுதிக்கு புறப்பட்டுச் சென்றார்.
Hindusthan Samachar / V.srini Vasan