பிரதமர் மோடி டிரம்ப் உடன் பேசியதை ஒப்புக்கொள்ள மறுப்பது ஏன்? - காங்கிரஸ் கேள்வி
புதுடெல்லி, 5 நவம்பர் (ஹி.ச.) இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான் தான் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். அதே வேளை, அவரது கருத்துக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. இதனிடையே, வெள்ளை மாநிலை செய்தித்தொடர்பாள
பிரதமர் மோடி டிரம்ப் உடன் பேசியதை  ஒப்புக்கொள்ள மறுப்பது ஏன்? - காங்கிரஸ் கேள்வி


புதுடெல்லி, 5 நவம்பர் (ஹி.ச.)

இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான் தான் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். அதே வேளை, அவரது கருத்துக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே, வெள்ளை மாநிலை செய்தித்தொடர்பாளர் கரோலின் கடந்த சில நாட்களுக்குமுன் அளித்த பேட்டியில்,

’வர்த்தகம் பிற ஒப்பந்தங்கள் தொடர்பாக ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பும், இந்திய பிரதமர் மோடியும் அடிக்கடி பேசி வருகின்றனர்.

என்றார்.

இந்நிலையில், டிரம்ப் உடன் பேசியதை பிரதமர் மோடி ஒப்புக்கொள்ள மறுப்பது ஏன்? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

டொனால்டு டிரம்ப் உடன் பிரதமர் மோடி பேசி வருவது வெள்ளைமாளிகை செய்தித்தொடர்பாளர் மூலம் தற்போது தெரியவந்துள்ளது.

டிரம்ப்பும், மோடியும் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால், டிரம்ப் உடன் பேசியதை பிரதமர் மோடி ஒப்புக்கொள்ள மறுப்பது ஏன்?. பிரதமர் மோடி எதற்கு பயப்படுகிறார்?

என பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / JANAKI RAM