கோவையில் 22 கிலோ கஞ்சா பறிமுதல் - ஒடிசாவைச் சேர்ந்த 5 பேர் கைது
கோவை, 6 நவம்பர் (ஹி.ச.) கோவை, தொண்டாமுத்தூர் காவல் நிலைய காவல் துறையினருக்கு கஞ்சா விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் மாதம்பட்டி சாலையின் அருகில் சென்று சோதனை மேற்கொண்ட போது கஞ்சாவை விற்பனைக்காக வைத்
22 kilograms of ganja seized in Coimbatore: 5 people from Odisha arrested – action taken by the Coimbatore District Police.


கோவை, 6 நவம்பர் (ஹி.ச.)

கோவை, தொண்டாமுத்தூர் காவல் நிலைய காவல் துறையினருக்கு கஞ்சா விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் மாதம்பட்டி சாலையின் அருகில் சென்று சோதனை மேற்கொண்ட போது கஞ்சாவை விற்பனைக்காக வைத்து இருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிஷ்ணு சரண் பிரதான் (45) மற்றும் நஹு பிரதான் (34) ஆகியோர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து சுமார் 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் ரயில்வே காவல் நிலையம் அருகில் சென்று சோதனை மேற்கொண்ட போது கஞ்சாவை விற்பனைக்காக வைத்து இருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜஷோபந்தா பிரதான் (40), கைசர் பிரதான் (43) மற்றும் பாபுலு பிரதான் (19) ஆகியோர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து சுமார் 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அந்த 5 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்து உள்ளார்.

Hindusthan Samachar / V.srini Vasan