தமிழகத்தில் 26 மாவட்ட வருவாய் அலுவலர்கள் இடமாற்றம் - தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவு
சென்னை, 6 நவம்பர் (ஹி.ச.) தமிழகம் முழுவதும் 26 மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தலைமை செயலாளர் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: சென்னை தலைமை ஆதிதிராவிடர் வீட்ட
தமிழகத்தில்  26 மாவட்ட வருவாய் அலுவலர்கள் இடமாற்றம் - தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவு


சென்னை, 6 நவம்பர் (ஹி.ச.)

தமிழகம் முழுவதும் 26 மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தலைமை செயலாளர் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:

சென்னை தலைமை ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) பொது மேலாளர் நாராயணன் கோவை மாவட்ட வருவாய் அலுவலராகவும், கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், வருவாய் நிருவாக ஆணையரகம் மற்றும் தனி அலுவலர், சிறப்பு பட்டா வழங்கல் திட்டம், துணை ஆணையராகவும், தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவன பொது மேலாளர் சங்கரநாராயணன் ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலராகவும்,

ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்ற வாரியம் செயலாளர் மற்றும் பொது மேலாளராகவும், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவன பொது மேலாளர் சிவசுப்பிரமணியன் வேலுர் மாவட்ட வருவாய் அலுவலராகவும், எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இணைஆணையர் கண்ணன் பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலராகவும்,

சென்னை வாழ்ந்து காட்டுவோம் திட்டம் பூங்கொடி மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலராகவும், நாகை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், முதுநிலை மண்டல மேலாளர் சிவப்பிரியா சென்னை சுற்றுலாத்துறை இணை இயக்குநராகவும், சென்னை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன பொது மேலாளர் துரை நெல்லை மாவட்ட வருவாய் அலுவலராகவும்,

நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா சென்னை நகராட்சி நிர்வாக துறை இணை இயக்குநராகவும், சென்னை பேரூராட்சிகள் இயக்ககம் இணை இயக்குநர் இளங்கோவன் தமிழ்நாடு வன்னிய குல சத்திரிய பொறுப்பாட்சிகள் நிலைக் கொடைகள் வாரியத்தின் முதன்மை நிர்வாக அலுவலராகவும், சென்னை தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன பொது மேலாளர் கவிதா திருவள்ளூவர் தமிழ்நாடு தொழில் முன்னோற்ற நிறுவனத்தின் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராகவும்(நிலஎடுப்பு),

திருவள்ளூர் நெடுஞ்சாலை சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் மதுசூதனன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன சட்ட அலுவலராகவும், காஞ்சிபுரம் பெரும்புதூர் சிப்காட் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன் சென்னை டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளராகவும், சென்னை தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவன பொது மேலாளர் ஜெயா சென்னை தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன பொதுமேலாளராகவும்,

சென்னை கலை மற்றும் பண்பாடு துறை இணை இயக்குநர் கீதா, சென்னை தேசிய உயர் கல்வித்திட்ட மேலாளராகவும் என தமிழ்நாடு முழுவதும் 26 மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b