Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 6 நவம்பர் (ஹி.ச.)
இன்று பங்குச் சந்தையில் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், நிப்பான், டிடி பவர் சிஸ்டம், வைபவ் குளோபல், ஸ்ஷேர் இந்தியா எக்ஸ் டிவிடெண்ட் வர்த்தகம் செய்ய உள்ளன. நவம்பர் 4 ஆம் தேதிக்குள் பங்குகளை வைத்திருக்கும் பங்குதாரர்கள் மட்டுமே ஈவுத்தொகையைப் பெற தகுதியுடையவர்கள்.
எக்ஸ் ரெக்கார்ட் தேதி என்பது ஒரு நிறுவனத்தின் அறிவிக்கப்பட்ட ஈவுத்தொகைக்கு எந்த பங்குதாரர்கள் தகுதி பெறுகிறார்கள் என்பதை தீர்மானிக்கும் முக்கிய கட்ஆஃப் நாளாகும். அந்த தேதியில் போர்ட்ஃபோலியோவில் இந்த பங்குகளை வைத்திருப்பவர்கள் மட்டுமே டிவிடெண்டுக்கான தகுதியை பெறுவார்கள்.
இன்று எக்ஸ் டிவிடெண்ட் வர்த்தகம் செய்யும் பங்குகள்
1. இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்:
இந்நிறுவனம் அக்டோபர் 29 அன்று ரூ.5 இடைக்கால ஈவுத்தொகை கொடுப்பதாக அறிவித்ததது. இதற்கான பதிவுத் தேதியாக நவம்பர் 6, 2025 நிர்ணயித்திருந்தது.
2. நிப்பான்:
அக்டோபர் 30 அன்று நிப்பான் இந்தியா நிறுவனம் அதன் முதலீட்டாளர்களுக்கு 9 ரூபாய் இடைக்கால ஈவுத்தொகை கொடுப்பதாக அறிவித்திருந்தது.
அதற்கான பதிவுத் தேதியாக நவம்பர் 6 நிர்ணயித்திருந்தது. இன்று இது எக்ஸ் டிவிடெண்டாக மாறும்.
3. டி.டி. பவர் சிஸ்டம்:
இந்நிறுவனம் அக்டோபர் 30, 2025 அன்று அதன் முதலீட்டாளர்களுக்கு 1 ருபாய் இடைக்கால ஈவுத்தொகை கொடுப்பதாக அறிவித்திருந்தது. அதற்கான பதிவுத் தேதியாக நவம்பர் 6 ஆக நிர்ணயித்திருந்தது.
4. வைபவ் குளோபல்:
நிறுவனம் அக்டோபர் 30 அன்று ரூ.1.50 இடைக்கால ஈவுத்தொகையை அறிவித்தது. ஈவுத்தொகை செலுத்துவதற்கான ரெக்கார்ட் தேதி நவம்பர் 6 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
5. ஷேர் இந்தியா:
இந்நிறுவனம் அக்டோபர் 20 அன்று ரூ..40 இடைக்கால டிவிடெண்ட் கொடுப்பதாக அறிவித்திருந்தது. ஈவுத்தொகை செலுத்துவதற்கான ரெக்கார்ட் தேதி நவம்பர் 6 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
Hindusthan Samachar / JANAKI RAM